வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா மிரளும் திரை உலகம் மாஸ் அப்டேட்

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா மிரளும் திரை உலகம் மாஸ் அப்டேட்

November 2, 2019 Off By admin

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடிக்க இருக்கிறார் தல அஜித். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கப் போகிறார். வலிமை படத்திற்காக தல அஜித் சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து பிளாக் ஹேரில் யங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

மேலும் தல அஜித் வலிமை படத்தில் இந்திய சினிமாவையே மிரட்டும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அப்டேட் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி டெல்லியில் துவங்க இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் வில்லனாக பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தான் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்து நம் அனைவரையும் மிரட்டி இருந்தார்.

அதை தொடர்ந்து தல அஜித்தின் 60வது படமான வலிமை படத்திலும் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக வலிமை படம் இந்திய சினிமாவையே மிரட்டப் போகிறது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. சரி, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்தால் மிரட்டலாக இருக்குமா இருக்காதா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

(Visited 1 times, 1 visits today)